டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணை முதல்வர் தகவல்

No-IPL-matches-in-Capital-says-Delhi-Government

டெல்லியில் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே ஐபிஎல் போட்டிகளுக்கு டெல்லியில் தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

“ஆளே இல்லாத கடைக்கு யாருக்குபா டீ ஆத்துறீங்க ?”- கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ் 

13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் ஏற்கெனவே பயிற்சிகளை தொடங்கிவிட்டனர்.

image


Advertisement

இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டுமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இக்கூட்டத்துக்கு ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

image

நடக்குமா ஐபிஎல் போட்டிகள் ? அணிகளின் உரிமையாளர்களுக்கு அழைப்பு 

இந்நிலையில் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இம்மாதம் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement