குடும்பம் நடத்த வராத மனைவி? தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் கணவர்

husband-Suicide-Attempt-with-Electric-shock-in-karur

கரூரில் மனைவி குடும்பம் நடத்த வராததால் மின்மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement

கரூர் அருகே சேங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மாயமணி மலர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை வந்துள்ளது.

“என் தாயை தப்பாக பேசினார் விஷால்; அவருக்கு ஆப்பு காத்திருக்கிறது”- மிஸ்கின் காட்டம்


Advertisement

image

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமணி மலர் கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. ராஜ்குமார் மனைவியை பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ராஜ்குமார் அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த ராஜ்குமாரை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

image


Advertisement

“2021‌‌ தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா விஜயகாந்த்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, ராஜ்குமாரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்துள்ளனர். இதுகுறித்து மாயனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement