டாஸ்மாக் பார் தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை : கூலிப்படை கும்பலுக்கு வலைவீச்சு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எடப்பாடி அருகே மதுபானக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள ஆலச்சம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகியோர் தண்ணீர்தாசனூர் பகுதியில் இயங்கிவந்த மதுபான கடையின் பாரில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் பூமணியூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் பாரில் மது அருந்த வந்த போது ராமமூர்த்தி, அண்ணாமலை இருவரிடமும் அனுமதி பெறாமல் பார் நடத்துவதாக கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி மற்றும் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

image


Advertisement

இதில் ஆத்திரமடைந்த துரைராஜ் கூலிப்படையைச் சேர்ந்த ஏழு பேரை நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பாருக்கு அழைத்து வந்து ராமமூர்த்தியையும், அண்ணாமலையையும் சரமாரியாக கத்தியால் வெட்ட வைத்துள்ளார். சம்பவத்தின்போது பாரில் மது அருந்த வந்தவர்கள் கூச்சலிட்டதால் பயந்துபோன கூலிப்படையினர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அண்ணாமலையை அங்கிருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவூர் காவல்துறையினர் ராமமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துரைராஜ் மற்றும் 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement

சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிவு : ஊசலாடும் இந்திய பங்கு சந்தைகள்

loading...

Advertisement

Advertisement

Advertisement