கார் மீது மோதிய சைக்கிள்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர் : விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எதிரே உள்ள காரை கவனிக்காமல் அதன் மீது சைக்கிளில் வந்த இளைஞர் மோதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சைக்கிளில் வந்த ஒருவர் தன்னை அறியாமல் கார் மீது மோதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதத்தைத் ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. எதிரே உள்ள வாகனத்தை கவனிக்காமல் முந்திக் கொண்டு வந்த இளைஞர் ஒரு கார் மீது மோதுகிறார். அந்த வேகத்தில் அவர் தனது சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்படுகிறார்.

image


Advertisement

ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். விபத்துக்குப் பின்னர் சில நிமிடங்கள் கழித்து திரும்ப எழுகிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ஆகவே இந்த விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை ஆஸ்திரேலியாவிலுள்ள டாஷ் கேம் உரிமையாளர்கள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும் காரை முந்திச் செல்லும் இளைஞர் எதிரே திரும்பிக் கொண்டிருந்த ஒரு காரை கவனிக்காமல் சென்றதால் இந்த விபத்து நேர்ந்தது. அவர் கீழே விழுந்த உடன் முன்பாக இருந்த கார் டிரைவர் அவரைக் காப்பாற்ற முன்வராமல் அவரது காரை எடுத்துக் கொண்டு வேகமாக புறப்படுகிறார். சைக்கிளில் வந்தவருக்குப் பின்னால் வந்த சக சைக்கிள் பயணிகள் சிலர் அவரை வந்து தூக்கி நிறுத்துகின்றனர். அதன்பின்னே அவர் ஒருநிலைக்கு திரும்புகிறார்.

Bike V turning car

இந்த வீடியோ கடந்த 9 அன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து 1,700 க்கும் மேற்பட்ட கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அதில் 1,200 க்கும் மேற்பட்ட எதிர்வினை புரிந்துள்ளனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement