[X] Close >

காதலன் செய்த கொடூரச் செயல் : அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி..!

Boyfriend-Leaks-Intimate-Video-Online-girl-hangs-self-in-Gujarat

குஜராத் மாநிலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதால் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

குஜராத் மாநிலம் சாராநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமியின் காதலனே இந்த வீடியோ தனது நண்பர்களுக்கு அனுப்பியதுதான் இந்த மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.


ரூ15 ஆயிரம் கடனுக்காக 11வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்ட இளைஞர்..! 


Advertisement

மன அழுத்தம் காரணமாக சிறுமி தன்னுடைய வீட்டில் உள்ள சீலிங்கில் திங்கட்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இருவரும் நெருக்கமாக உள்ள வீடியோவை சிறுமியின் காதலன் அவருடைய நண்பர்கள் மூன்று பேருக்கு அனுப்பியுள்ளார். அந்த மூன்று நண்பர்களும் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்துள்ளனர். இதனையடுத்து, அந்தச் சிறுமியின் பெற்றோருக்கும் இந்த வீடியோ குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

image

இதனையடுத்து, சிறுமியின் காதலனுக்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும், வீடியோ வெளியானது முதலே அந்த சிறுமி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இறுதியில் தன்னுடைய வாழ்க்கையை திங்கட்கிழமை மாலை முடித்துக் கொண்டுள்ளார். சிறுமியும், அவரது காதலனும் ஒருவொருக்கொருவர் சம்மதத்துடன் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். ஆனால், அந்த வீடியோவை சிறுமியின் காதலன் மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டார்” என சர்தார் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.


Advertisement

image


கட்டணத்திற்காக கணவரின் கிட்னி, இதயம், கண்களை கேட்கிறார்கள் - மருத்துவமனை மீது பெண் புகார் 


மேலும், “போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close