சென்னையில் கேட்பாரற்று நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து தகவல் அளிக்க, செல்போன் செயலி ஒன்றை சென்னை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு சாலைகளில் யாரும் உரிமை கோராமல் கேட்பாரற்று நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து தகவல் அளிக்க, பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகின்றன.
இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பினை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.
மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்த தகவலை GCTP Citizen Services என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பதிவேற்றம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரில் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
“நீலகிரியில் வெட்டப்படும் ஒவ்வொரு மரங்களுக்கும் பதிலாக 10 மரங்கள் நடப்படும்”- முதலமைச்சர்
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்