ஓடி வந்து சறுக்கி விழுந்து தோனியின் கால்களைப் பிடித்த ரசிகர் - வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

13-வது ஐபிஎல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பையில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றைய பயிற்சியில் மகேந்திர சிங் தோனி, முரளி விஜய், அம்பத்தி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Advertisement

image

சென்னை அணி வீரர்களின் பயிற்சியினை பார்க்க வழக்கம்போல ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அப்போது ரசிகர் ஒருவர்
இரும்பு வேலியை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது மைதானத்திற்குள் பயிற்சி செய்துகொண்டிருந்த கேப்டன் தோனியை நோக்கி சென்று கட்டிப் பிடிக்க முயன்றார். பின்னர் நிலைதடுமாறிய அவர் தோனியின் காலில் விழுந்தார்.

“தோனி போன்ற ஒரு பெஸ்ட் ஃபினிஷரை தேடுகிறோம்”: ஆஸ். பயிற்சியாளர்


Advertisement

image

ரசிகரை துரத்திக்கொண்டு ஓடிவந்த பாதுகாவலர்கள், அந்த ரசிகரை அப்புறப்‌படுத்தி மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். தோனியை பார்க்க ஆர்வப்பட்டு ரசிகர்கள் இரும்பு வேலியைத் தாண்டி மைதானத்திற்குள் செல்வது தொடர்கதையாகும் நிலையில், ரசிகர்கள் இருக்கும் கேலரியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement