பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மக்கள் இந்தியா வர அனுமதி மறுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சம் காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மூன்று நாடுகளை சேர்ந்தவர்களை தவிர இங்கு கடந்த 1-ஆம் தேதிக்கு பின்னர் சென்ற பிற நாட்டினருக்கும் இந்தியாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“சச்சின் டக் அவுட்.. சேவாக் ரன் அவுட்”.. இருந்தும் இந்தியா லெஜண்ட் அதிரடி வெற்றி


Advertisement

Image result for கொரோனா

மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் இந்த அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image result for கொரோனா


Advertisement

“தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நபர் குணமடைந்தார்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

இதற்கிடையில் சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு இந்திய குடிமக்களை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement