JUST IN

Advertisement

“சச்சின் டக் அவுட்.. சேவாக் ரன் அவுட்”.. இருந்தும் இந்தியா லெஜண்ட் அதிரடி வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.


Advertisement

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான வேல்டு சீரியஸ் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இன்றையப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

image


Advertisement

“தோனி போன்ற ஒரு பெஸ்ட் ஃபினிஷரை தேடுகிறோம்”: ஆஸ். பயிற்சியாளர் 


அந்த அணியில் தில்ஷான், குபுஜெதெரா தலா 23 ரன்களும், குலுவிதரனா 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முனாப் பட்டேல் 4 விக்கெட் வீழ்த்தினார். 139 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா லெஜண்ட்ஸ் அணி விளையாடியது.

image


Advertisement

தொடக்க வீரர்களாக சச்சின், சேவாக் களமிறங்கினர். சச்சின் தான் சந்தித்த இரண்டாவது பந்திலே ஜமிந்தா வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அதிரடி ஆட்டக்காரரான சேவாக் 3 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

யுவராஜ் சிங்கும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். முகமது கைஃப் மட்டும் சற்று நேரம் நிலைத்து ஆடி 46 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பின்பு வெற்றி வாய்ப்பு குறைந்தது. நிச்சயம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி தோல்வியை சந்திக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் இறுதியில், இர்பான் பதான் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

       image


சொந்த மண்ணில் தென்னாப்ரிக்கா தொடர்: மீண்டெழுமா இந்திய அணி? 


பின்னர், சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். வெற்றியை நோக்கி இந்தியா லெஜண்ட்ஸ் அணி பயணித்தது. இறுதியில், 18.4 ஓவர்களிலேயே வெற்றியும் பெற்றது. இர்பான் பதான் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement