“வாத்தி கம்மிங் ஒத்து” - விஜய் நடனத்தில் அதிரவைக்கும் மாஸ்டர் பாடல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாஸ்டர் படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாகும் என இயக்குநர் லோகஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது ‘வாத்தி coming ஒத்து’  என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத் தட்ட முடிந்துவிட்ட நிலையில் அதன் ப்ரமோசன் வேலைகளிலும் ஒருபுறம் படக்குழு களமிறங்கியுள்ளது. இதற்கு முன் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

image


Advertisement

அதன் பிறகு பிப்ரவரி 14’ஆம் தேதி "let me sing a kutti story" என்ற பாடல் வெளியானது. தற்போது மாஸ்டர் படத்தின் அடுத்த பாடலும் வெளியாகியுள்ளது. இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளும் கூட "let me sing a kutti story" பாடலைப் போலவே தனி அடையாளங்களை தாங்கி நிற்கிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘வாத்தி coming ஒத்து’ என்ற இந்தப் பாடல் ஒரு தீம் இசையைப் போலவே உள்ளது. “அண்ணன் வந்தா atom bomb டும்மு., டோம்பா டோம்பா., பிளுபிளுபிளு பிளாம்பி” என்பது போன்ற வார்த்தைகளைப் போட்டு இப்பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

image


Advertisement

கல்லூரியின் கலை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட காட்சி போல் இந்தப் பாடல் இருக்கின்றது. மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற
புகைப்படங்கள் பாடலின் நடுவே வருகிறது. விஜய் செம்ம எனர்ஜியாக ஒரு நடினம் ஆடியிருக்கிறார் என்பதை இப் பாடல் காட்டுகிறது. வழக்கமாகவே விஜய்யின் நடனம்
கெத்தாக இருக்கும். அது போலவே இந்த பாடலுக்கான விஜயின் நடனமும் நிச்சயம் நன்றாக அமைந்திருக்கும் என்றே தெரிகிறது. விஜயை மாஸ் ஆக காட்டி இந்தப் பாடல்
எழுதப்பட்டுள்ளது.

பாடலின் நடுவே இசையமைப்பாளர் அனிருத் நடனம் ஆடுகிறார். இடையிடையே படப்பிடிப்பு தளத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் கூட இடம் பெறுகின்றன. அதில்,
நடனம் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் வரிகளின் அர்த்தம் என்ன என்பதை படக்குழு தான் ரசிகர்களுக்கு விளக்க வேண்டும். இசையை
கேட்பதற்கு சற்றே பாடல் வரிகள் தடையாக இருப்பதாகவே தெரிகிறது. மொத்தத்தில் பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல் போன்று விஜய்க்கு ஒரு வெயிட்டான
பாடலை கொடுக்க முயற்சித்திருக்கிறார் அனிருத்.

image

மாஸ்டர் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மொத்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா வரும் மார்ச் 15’ஆம் தேதி தனியார் நட்சத்திர ஹோட்டலில்
நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

loading...
Related Tags : vijayMasterLokesh Kanagarajmaster song

Advertisement

Advertisement

Advertisement