[X] Close >

நீண்ட நெடிய அரசியல் பின்னணி.. ஜோதிராதித்ய குடும்பத்தில் பாஜகவும், காங்கிரசும்.! யார் இவர்?

who-is-jyodhiraditya-scindhiya

மத்தியப் பிரதேச அரசியலில் ஆட்டம் காமிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, இன்று பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ளார். இவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி விலகும் பட்சத்தில் ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா..? அவரின் அரசியல் பயணம் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்பதை தெரிந்துகொள்வோம்.


Advertisement

image

ஜோதிராதித்ய சிந்தியா தனது 13-வது வயதில் பொது வாழ்க்கையில் ஈடுபடத் துவங்கினார். அதாவது 1984-ஆம் ஆண்டு தனது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவுக்காக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சிந்தியா குடும்பத்தின் மரபு இன்னும் முந்தையது.


Advertisement

image

அதாவது 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான், குவாலியர் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. அதன்பின் 1956-ல் மத்திய பிரதேசத்தில் இணைந்தது. ஜோதிராதித்ய சிந்தியாவின் தாத்தாவான ஜிவாஜிராவ் சிந்தியா, அப்போதைய காலகட்டத்தில் ராஜ்பிரமுக் ஆக இருந்தவர். குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவ்ராவ் சிந்தியா.

image


Advertisement

மாதவ்ராவ் சிந்தியா 1971-ஆம் ஆண்டு தனது 26 வயதில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் குவாலியர் மற்றும் குணா தொகுதிகளில் இருந்து தொடர்ந்து ஒன்பது தேர்தல்களில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்தே தந்தை வழியை பின்பற்றிய ஜோதிராதித்ய சிந்தியாவும் பொதுசேவையில் இறங்கினார். ஜோதிராதித்ய சிந்தியா டெஹ்ராடூனில் உள்ள டூன் பள்ளியில் படித்தார். 1993-ல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார படிப்பை முடித்த அவர், அதைத்தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் 2001-ஆம் ஆண்டு எம்பிஏ பட்டம் பெற்றார்.

image

2001-ஆம் ஆண்டு அவரது தந்தை இறப்புக்கு பின்னர், குணா மக்களவைத் தொகுதி காலியிடமானது. இதனையடுத்து 2002-ஆம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா, அத்தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

வீடு புகுந்து நகைகளை திருடிய கொள்ளையர்கள்.. சத்தம் கேட்டு உஷாரான கிராமம்..!

அதைத்தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு குணாவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தில், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தனது தொகுதியில் நீர் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் விரிவாக பணியாற்றினார். 2008-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சராக பணியாற்றினார். 2009-ஆம் ஆண்டு 15-வது நாடாளுமன்ற தேர்தலில் உறுப்பினராக தேர்வானார். மேலும் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்தார்.

image

இதனிடையே சிந்தியா குடும்பத்தில் சிலர் பாஜகவிலும் இருந்துள்ளனர். அதாவது ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே, ஒரு காலத்தில் குவாலிய சமஸ்தானத்தை ஆட்சி செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1957-ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்து குணா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

image

பின்னர், 1967-ஆம் ஆண்டு ஜன சங்கத்திற்கு மாறினார். 1971-ஆம் ஆண்டில், ஜன சங்கம் இந்திரா அலையை மீறி மூன்று இடங்களை வென்றது. அதாவது, பிஹைண்டு பகுதியை விஜயராஜே, குவாலியர் பகுதியை அடல் பிஹாரி வாஜ்பாய், குணா பகுதியை விஜயராஜேவின் மகன் மாதவ்ராவ் சிந்தியா ஆகியோர் கைப்பற்றினர்.

image

மாதவ்ராவ் சிந்தியா 26 வயதில் மக்களவை எம்.பி. ஆனார். ஆனால் ஜன சங்கத்துடனான தொடர்பு அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மேலும் 1977-ல் அவசரநிலைக்குப் பிறகு ஜன சங்கம் மற்றும் அவரது தாயுடன் இருந்து பிரிந்து செல்ல மாதவ்ராவ் சிந்தியா முடிவு செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு மாறிய அவர், 1980-ஆம் ஆண்டு குணா தொகுதியில் மூன்றாவது முறையாக வென்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

ம.பி.யில் ஆட்சியமைக்க பார்க்கிறதா பாஜக?

image

இதற்கிடையில் விஜயராஜேவின் மகள்களான வசுந்தர ராஜே மற்றும் யசோதர ராஜே ஆகியோரும் அரசியலுக்கு வந்தனர். 1984-ஆம் ஆண்டு வசுந்தர ராஜே பாஜகவில் இணைந்தார். அவர் தோல்பூரிலிருந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வசுந்தரராஜே மகன் துஷ்யந்த் ராஜஸ்தானில் ஜலாவர் தொகுதியில் பாஜக எம்.பியாக உள்ளார்.

image

யசோதர ராஜே, இருதய நோய் மருத்துவரான சித்தார்த் பன்சாலி என்பவரை திருமணம் செய்த பின்னர் அமெரிக்கா சென்றார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் யாரும் அரசியலில் சேரவில்லை. 1994-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய யசோதர ராஜே 1998-ஆம் ஆண்டு பாஜக அடையாளத்தோடு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர் 5 முறை எம்.எல்.ஏ ஆன இவர், பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் அரசில் அமைச்சராக இருந்தார்.

image

ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருக்கவே முடிவு செய்தார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது நீண்டகால உதவியாளர் கிருஷ்ணா பால் சிங் யாதவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close