அரச குடும்ப உறுப்பினர்களாக ஹாரி - மேகன் தம்பதி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர்.


Advertisement

இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தில் இருந்து விலகியதை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

image


Advertisement

அவர்கள் இருவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் 'ராயல்' என்னும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹாரி - மேகன் தம்பதி, இறுதி முறையாக அரச குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் நடைபெற்ற காமன்வெல்த் தின விழாவில் அரச குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

image


Advertisement

இந்த விழாவில் அரச குடும்ப உறுப்பினர்களாக கலந்துகொள்ள ஹாரியும் மேகனும் ராஜ உடையில் வருகை தந்திருந்தனர். ஹாரி-மேகன் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி என்பதால் அவர்களை ராஜ உடையில் பார்த்த மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

 “பிளேனும் ஹெலிகாப்டரும் டேக் ஆஃப் ஆகப்போது” - தோனி விளம்பரத்தில் மெசேஜ்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement