கொரோனாவில் இருந்து தப்பலாம் என நினைத்து கள்ளச் சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸில் இருந்து தப்பலாம் என நினைத்துக் கொண்டு, ‌ஈரானில் கள்ளச் சாரா‌யம் குடித்த 27‌ பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது‌. கொரோனாவால் 3,800க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரா ஒலிம்பிக்கில் சாதிக்க துடிக்கும் இளைஞர்.. திறமை இருந்தும் பணம் இல்லாமல் தவிப்பு


Advertisement

சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸால் முடங்கியுள்ளது இத்தாலி. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை அல்லது 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

image

ஈரானில் 237 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், 7,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் ஈரான் அரசு, சிறைக்கைதிகள் 70 ஆயிரம் பேரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.


Advertisement

image

இந்நிலையில், மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பலாம் எ‌‌ன ஈரானில் வதந்தி பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து, தடையை‌ மீறி ஈரானில் ஏராளமானோர் கள்ளச் சாரா‌யம் அருந்தியதாக கூறப்படுகி‌றது. இதில் குசெஸ்தான் மற்றும் அல்பார்ஸ் பகுதிகளில் மது‌ அருந்திய 27 பேர் உயிரிழந்‌தனர். ‌218 பேர் மருத்துவ‌னை‌களில்‌ சிகிச்சை பெற்று வருகின்‌றனர். மெத்தனால் என்ற வேதிப்பொருள்‌‌ கலந்த சாராய‌ம் குடித்ததே இந்த உயிரிழப்புக்கு‌ ‌காரணம் என தெரிவிக்‌கப்படுகி‌றது.

முகாமில் எத்தனை நாட்கள்? திக்கற்றுப்போன வடகிழக்கு டெல்லிவாசிகள்

loading...

Advertisement

Advertisement

Advertisement