உலகை அச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியது‌. கொரோனாவால் 3,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

சீனாவில் மட்டும் மூவாயிரத்துக்கு அதிகமானோரை பலி கொண்டுள்ளது இந்த வைரஸ். சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸால் முடங்கியுள்ளது இத்தாலி. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை அல்லது 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இத்தாலியில் இதுவரை 9,172 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் 237 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் ஈரான் அரசு, சிறைக்கைதிகள் 70 ஆயிரம் பேரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

image

கடந்த மாத‌ம் ஜப்பான் சென்ற அமெரிக்காவின் கிராண்ட் பிரின்சஸ் கப்பல், கொரோனா பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் கலிபோர்னியா வந்து சேர்ந்தது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

கொரோனாவில் இருந்து தப்பலாம் என நினைத்து கள்ளச் சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement