டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வீடுகளில் புகுந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் வீட்டை எரித்தும் சேதப்படுத்திய வன்முறையாளர்களால் வடகிழக்கு டெல்லி மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்காக டெல்லி அரசு தரப்பில் எட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி வக்பு வாரியம் தரப்பில் ஆயிரம் பேர் தங்கும் வகையில் முஸ்தஃபாபாத்தில் உள்ள எட்காஹ் பகுதியில் பிரமாண்ட முகாம் ஒன்றும் திறக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், படுக்கை உள்ளிட்ட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
முகாமில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டாலும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில் தங்களின் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடு இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பெறுவதற்கான ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் நிதியுதவியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
வன்முறையின்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்ட முக்கிய ஆவணங்களுக்கு மாற்றாக புதிய ஆவணங்கள் விரைவில் வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. எத்தனை நாட்கள் இந்த முகாமில் தங்கமுடியும், புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு அரசு கொடுக்கும் நிதி போதுமா என்பது போன்ற சந்தேகங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நிழலாடுகிறது
“ம.பி.யில் அரசை வீழ்த்துவதில் எங்களுக்கு துளிகூட விருப்பமில்லை”- சிவராஜ் சிங் சவுகான்
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?