கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் கொடூரமாக வெட்டிக் கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலத்தில் வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

சேலம் மாவட்டம் செம்மண்திட்டு பகுதியில் தங்கராஜ் என்பவர் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். அதில் ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ் மற்றும் வந்தனா தம்பதியும், அவர்களது உறவினரான சன்னி என்பவரும் வேலை செய்துள்ளனர். தங்கராஜின் வீட்டின் அருகிலேயே இந்தக் குடும்பத்தினர் வசித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று ஆக்ராவைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள் அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளனர்.


Advertisement

நேற்றிரவு ஆகாஷ் மர்றும் வந்தனா தம்பதியின் 10 மாத குழந்தை நீண்ட நேரமாக அழும் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டுப் பெண் அங்கு சென்று பார்த்துள்ளார். குழந்தை வீட்டின் வெளியே தொட்டிலில் இருக்க, வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த வீட்டைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ரத்த வெள்ளத்தில் வந்தனாவின் உடல் கிடந்துள்ளது. வீட்டின் பின்புறம் ஆகாஷ், சன்னி இருவரின் உடல்களும் சரமாரியான வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன.

imageஇதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், புதிதாக வேலைக்குச் சேர்ந்த 4 பேர் தலைமறைவானதால் அவர்கள்தான் மூவரையும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 4 பேரையும் தேடி, தனிப்படை ஆக்ரா விரைந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement