பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல்

Bomb-parcel--will-be-delievered-to-Tamilnadu-BJP-office

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சலுடன் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரையடுத்து, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு நடத்தினர். பார்சலில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த மிரட்டல் கடிதத்தில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சில வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. 

மாட்டிறைச்சி விவகாரம் மற்றும் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சி செய்த சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னர் பாஜக தலைமை அலுவலகத்துக்கு இந்த மிரட்டல் கடிதமும் பார்சலும் வந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற மிரட்டல் கடிதங்கள் வந்துள்ள போதிலும், இதுவரையில் பார்சல் எதுவும் வந்ததில்லை. தற்போது முதல்முறையாக வெடிமருந்து பார்சல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement