60 வயதில் தோழியை திருமணம் செய்த முகுல் வாஸ்னிக்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தனது நீண்ட நாள் தோழியான ரவீனா குரானாவை தனது 60 ஆவது வயதில் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.


Advertisement

image

இந்திய மசாலா உணவுகளையும், நிலவேம்பு கசாயத்தையும் விரும்பி உண்ணும் சீனர்கள்..! 


Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் முகுல் வாஸ்னிக். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வரும் இவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர். அத்துடன், ராகுல் காந்தி தலைமைப் பதவியிலிருந்து விலகிய பின்பு, தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரும் இடம் பெற்றிருந்தது.

image

இப்போது முகுல் வாஸ்னிக் தனது 60 ஆவது வயதில் தோழியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


Advertisement

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் - இவையெல்லாம்தான் காரணமா? 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். முகுல் வாஸ்னிக் மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருந்த பால்கிருஷ்ணன் மகன். இவர் காங்கிரஸ் கட்சியில் உள்ள பட்டியலின தலைவர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement