சென்னையில் நடிகை வீட்டில் நகைகள் திருட்டு... கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் நடிகை ஒருவரின் வீட்டில் தங்க நகைகளை திருடிய காவலாளியையும், கார் ஓட்டுநரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் தெருவில் குடியிருப்பவர் நடிகை ஜெயபாரதி. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்ற திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரஜினி நடித்த ‘முத்து’ திரைப்படத்தில் சரத்பாபுவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட பல படங்களில் ஜெயபாரதி நடித்துள்ளார்.

இவருக்கு சொந்த ஊர் கேரளா என்பதால் சென்னைக்கு அடிக்கடி வருவதில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் நேபாளத்தைச் சேர்ந்த ஹரிக்குமார் ஜெயபாரதியின் வீட்டில் காவலாளியாக வீட்டு வேலைகளை செய்து வந்தார். கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக சென்னை நுங்கம்பாக்கம் வீட்டிற்கு வந்த ஜெயபாரதி, தன்னுடைய நகைகளை எடுப்பதற்காக லாக்கரை திறந்துள்ளார்.


Advertisement

image

 

அப்போது 31 சவரன் தங்க நகைகளை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை ஜெயபாரதி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வீட்டில் கொள்ளை நடந்த பிறகுதான் வீட்டில் வேலை பார்த்த காவலாளி ஹரிக்குமார் விடுமுறை பெற்றுக் கொண்டு சென்றது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரித்ததில் நடிகையின் கார் ஓட்டுநர் இப்ராஹிமும், இவரும் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது.


Advertisement

காவலாளி ஹரிக்குமாரும், கார் ஓட்டுநர் இப்ராஹிமும் போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக, ஹரிக்குமார் தன்னுடைய சகோதரருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது எனக்கூறி தன்னுடைய சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுள்ளார். ஆனால் அவர் நேபாளம் செல்லவில்லை.

காவல்துறையினர் ஹரிக்குமாரை தேடி வந்தபோது அவரது வீட்டில் இருந்த மற்றொரு கார் ஓட்டுநர் ஒருவருக்கு ஹரிக்குமார் போன் செய்து ஆயிரம் ரூபாய் பணம் தேவை என கேட்டுள்ளார். இதனை தெரிந்து கொண்ட போலீசார், சாமர்த்தியமாக பேசி கார் ஓட்டுநர் மூலமாக ஹரிக்குமாரை வரவழைத்து கைது செய்தனர். இதனையடுத்து கூட்டாளி இப்ராஹிமையும் கைது செய்தனர்.

“அதுதான் நீங்கள்”- திருமண நாளில் நெகிழ்ச்சி பதிவிட்ட குஷ்பு...!

image

 

 

மேலும் அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் தங்க நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ஜெயபாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் வீட்டில் நகைகளை திருடிய 2 பேரையும் போலீசார் விரைந்து கைது செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் போலீசாருக்கு நன்றி. தெரிந்தவர்கள் சொன்னதாலேயே வேலைக்கு வைத்தேன். ஆனால் அவர்களை நகைகளை திருடியது அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement