கொரோனா வைரஸ் பாதிப்பு: ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுகிறதா ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Advertisement

image

13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 97 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

"அடடா என்னவொரு கண்கொள்ளா காட்சி"- சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம் ! 

image

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி "ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம், பிசிசிஐ தரப்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும்" என கூறப்படுகிறது.


Advertisement

image

"ஐபிஎல் தொடரை தாமதமாக நடத்தலாமே" கொரோனா பாதிப்பு காரணமாக அமைச்சர் பேச்சு 

இது குறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே "கொரோனா ஒரு தொற்றுநோய் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைரஸ் வேகமாக பரவும். அதுவும் ஐபிஎல் போன்ற போட்டிகள் நடக்கும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தாமதமாக நடத்தலாம்" என கூறியிருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement