கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தாமதமாக நடத்தலாம் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே யோசனை தெரிவித்துள்ளார்.
13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 97 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்திய அணியின் சறுக்கல் ஆரம்பித்த புள்ளி இதுதான்..!
இதனால் பெரிய அளவு பாதிப்பு உலகெங்கிலும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த ராஜேஷ் டோபே "கொரோனா ஒரு தொற்றுநோய் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைரஸ் வேகமாக பரவும். அதுவும் ஐபிஎல் போன்ற போட்டிகள் நடக்கும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தாமதமாக நடத்தலாம்.
கொரோனா நடவடிக்கையில் அலட்சியம் காட்டுகிறதா விமான நிலையம் ? கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!
ஆனால் இதுகுறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி " திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் கொரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் கொரோனா வைரஸ் பரவாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி