[X] Close >

கொரோனா நடவடிக்கையில் அலட்சியம் காட்டுகிறதா விமான நிலையம் ? கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!

Why-airport-screening-won-t-stop-the-spread-of-coronavirus

ஓமனிலிருந்து காஞ்சிபுரம் திரும்பியவருக்கு‌ கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்‌டதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் ஓமனில் இருந்து வந்த நிலையில் அவரை எப்படி விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள் என்றும், உரிய சோதனை நடத்தப்பட்டிருந்தால் அவர் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டுமே என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Advertisement

image

இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் முறையான சோதனைக்கு பிறகே வெளியில் அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அப்படி முறையாக சோதனை செய்யப்படுவதாக தெரியவில்லை என பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லி, மும்பை போன்ற இடங்களில் இருந்து வரும் உள்ளூர் விமான பயணிகள் கண்காணிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.


Advertisement

image

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டில் இருந்து டெல்லி வந்து, பிறகு டெல்லியில் இருந்து சென்னை வருபவர்கள் என்றால் நிலைமை என்னவாகும் என கேள்வி எழுப்புகின்றனர் இணையவாசிகள். மருத்துவ சோதனை எதுவும் இல்லை. ஒரு கூட்டமாக வருபவர்களை ஒரு இடத்தில் கூட சொல்கிறார்கள். அங்குள்ள ஒரு விண்ணப்பத்தில் சில தகவல்களை எழுத சொல்கிறார்கள். இப்படி மக்களை ஒரே இடத்தில் கூட சொல்வதே தவறு தானே? என்று ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

image


Advertisement

மற்றொருவர் பதிவிட்டுள்ள பதிவில், தான் கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததாகவும், தாங்கள் ஆட்டுமந்தையைப் போலவே நடத்தப்பட்டதாகவும், விண்ணப்பத்தை மட்டுமே பூர்த்தி செய்ய சொன்னார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் பதிவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீடியோ ஒன்றை பதிலாக பதிவிட்டுள்ளார். அதில் விமான நிலையத்தில் நடக்கும் மருத்துவ பரிசோதனைகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close