JUST IN

Advertisement

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவியியுள்ளது. சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரம் பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


Advertisement

சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை: போலீசார் விசாரணை

image

இந்தியாவில் மொத்தம் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரளாவில் மேலும் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அம்மாநில அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதன்படி, இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேருக்கும், கேரளாவில் உள்ள இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்தது.


Advertisement

சட்டப்பேரவை வாயிலில் சானிடேஷன் செய்ய மருத்துவக்குழு

image

இந்நிலையில் கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாதிப்பிற்குள்ளான குழந்தை சமீபத்தில் பெற்றோருடன் இத்தாலிக்கு சென்றுவிட்டு திரும்பியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் மட்டும் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement