JUST IN

Advertisement

6 ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை - கூண்டு வைத்து பிடிக்க திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க ஜல்லியூர் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.


Advertisement


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேட்டூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை தென்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்காக திலகவதி என்பவரது தோட்டத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. பெரியகள்ளிப்பட்டியில் 6 ஆடுகளை அடித்துக் கொன்றது. தொடரும் சிறுத்தை அட்டகாசத்தால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜல்லியூர் பகுதியில் விவசாயி பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 வெள்ளாடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக விவசாயப்பணிகளை மேற்கொள்ள முடியால் தவித்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று வனத்துறையினர் ஜல்லியூர் பழனிச்சாமி தோட்டத்தில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ள பகுதியில் கூண்டு வைத்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 3 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வரும் சிறுத்தை ஜல்லியூரில் வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement