டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இனி பணம் எடுக்கலாம் என்று யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழுமம் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரூ.600 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மும்பையில் கைது
இந்நிலையில் யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
You can now make withdrawals using your YES BANK Debit Card both at YES BANK and other bank ATMs. Thanks for your patience. @RBI @FinMinIndia— YES BANK (@YESBANK) March 7, 2020
அறிவிப்புக்கு முதல்நாள் யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்
இந்தச் சிக்கல் காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று இரவு யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் "டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி ஏடிஎம் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பொறுமை காத்திருந்ததற்கு நன்றி" என தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பினால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை