[X] Close >

"எனக்கு உங்களது பாராட்டுகள் வேண்டாம் மோடி" 8 வயது சிறுமியின் வைரலாகும் ட்வீட் !

licypriya-kangujam-twit-about-modi----

மோடியை நிராகரித்து ட்வீட் செய்துள்ளார் 8 வயது சிறுமி லிசிப்ரியா கங்குஜம்.


Advertisement

நாளை உலகமே பெண்கள் தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. இந்நிலையில் மோடியை நிராகரித்து லிசிப்ரியா கங்குஜம் செய்திருக்கும் ட்வீட் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்தார். பிறகு சர்ப்ரைசாக அதற்கான விளக்கத்தையும் அவர் கூறினார். அதன்படி சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய சமூக வலைதள கணக்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஆளுமைகள் நிர்வகிப்பர் என அறிவித்தார். அதற்காக #SheInspiresUs என்ற ஹாஸ்டாகும் உருவாக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் பலரும் சிறந்த பெண் ஆளுமைகளை குறிப்பிட்டு ட்வீட் செய்து வந்தனர்.

image


Advertisement

MyGovIndia இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான ட்விட்டர் பக்கம் இது. இந்த பக்கத்திலும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்த பெண் ஆளுமைகள் குறித்து ட்வீட்டுகள் பதிவிடப்படுகின்றன. அந்த வரிசையில் லிசிப்ரியா கங்குஜத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டது. ஆனால் அரசின் அந்த ட்வீட்டிற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் 8 வயது சிறுமி லிசிப்ரியா கங்குஜம்.

யார் இந்த லிசிப்ரியா கங்குஜம்...?

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி லிசிப்ரியா கங்குஜம். சுற்றுச் சூழல் ஆர்வலரான இவர் இத்தனை சிறியவயதில் வியத்தகு விருதுகளைப் பெற்றுள்ளார். Institute for Economics & Peace நிறுவனம் வழங்கும் குழந்தைகளுக்கான உலக அமைதி விருது, இந்தியா அமைதிப் பரிசு, 2019 ஆம் ஆண்டுக்கான அப்துல்கலாம் குழந்தைகள் விருது என பல விருதுகளை சுற்றுச் சூழல் தொடர்பான தன்னுடைய செயல்பாடுகளுக்காக இவர் பெற்றுள்ளார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க தொடர்ந்து போராடியும் வருகிறார். இதுவரை 51,000 மரங்களை நட்டு வைத்திருக்கிறார் இவர். இந்த எண்ணிக்கையை லிசியின் வயதுடன் வகுத்து கணக்கிட்டால் நாளொன்றுக்கு 16 மரங்களை இவர் நட்டிருக்கிறார்.


Advertisement

image

இது மட்டுமல்லாமல் சுகிபு என்ற காற்றை சுத்திகரிக்கும் கருவியினையும் இவர் கண்டுபிடித்திருக்கிறார். வீட்டில் வளர்க்கும் சிறிய தொட்டிச் செடியில் இருந்து பிராணவாயுவை எடுக்கும் கருவி தான் சுகிபு. இப்படி தனது 8 வயதிற்குள் லிசி செய்திருக்கும் சாதனைகள் பலப்பல.

image

#SheInspiresUs மூலம் இவரது பெயரும் MyGovIndia பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதில் கூறியிருக்கும் லிசிப்ரியா கங்குஜம் “அன்புள்ள மோடி, எனக்கு உங்களது பாராட்டுகள் வேண்டாம், மாறாக நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் என்னுடைய குரலை உங்களது எம்.பி.க்கள் உரக்க பேசினாலே போதும். என்னை உங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். I just wants system change, not climate change.” என குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் இந்த எதிர்வினைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close