யெஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையொட்டி டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களான போன் பே, பேடிஎம் ஆகியவை ட்விட்டரில் மோதிக்கொண்டன.
யெஸ் வங்கி வாராக்கடன் அளவு 17 ஆயிரத்து 134 கோடி ரூபாயாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக, அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. அத்துடன் அதன் வாடிக்கையாளர்கள் தலா ரூ.50,000 பணத்தை மட்டும் 30 நாட்களுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் யெஸ் வங்கியுடன் பெரும் வர்த்தக பங்குதாரராக இருக்கும் ‘போன் பே’ டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனத்தை பாதித்திருக்கிறது. இதனால் நேற்று மாலை முதல் ‘போன் பே’வில் பணப்பரிமாற்ற சிக்கல் இருப்பதாக அதன் பயன்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர். இதுதொடர்பாக இன்று காலை விளக்கமளித்திருந்த போன் பே நிறுவனத்தின் சிஇஓ சமீர் நிகாம், “நீண்ட நேர தடைக்கு வருந்துகிறோம். எங்கள் பங்குதாரர் யெஸ் வங்கியை ஆர்.பி.ஐ நிறுத்தி வைத்துள்ளனர். நிலையை விரைவில் சரி செய்ய எங்கள் அணி இரவு முழுவதும் பாடுபடுகிறோம். சில மணி நேரங்கள் நேரலையில் இருப்போம். உங்கள் பொறுமைக்கு நன்றி. தகவல்களுக்கு காத்திருங்கள்!” என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ட்விட்டர் பக்கத்தில், “டியர் போன் பே, டிஜிட்டல் வர்த்தகத்தில் உங்களை பேடிஎம் பேங்கிற்கு அழைக்கிறோம். ஏற்கனவே பலர் வந்துவிட்டனர். மேலும் உங்கள் வணிகத்தை பன்மடங்கு தடையின்றி கையாள முடியும். உங்கள் சேவை விரைவில் மீட்டுத்தருகிறோம்” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ட்விட்டரில் உடனே விளக்கமளித்துள்ள ‘போன் பே’, “டியர் பேடிஎம் பேங்க், உங்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதில் அளவிட முடியாத தடையிருக்குமென்றால் சொல்லுங்கள், உங்களை எங்களுடன் சேர்த்துக்கொள்கிறோம். எங்கள் நீண்ட நாள் பங்குதாரர்கள் சரிவை சந்திக்கும் நேரத்தில், உடனடியாக ஒரு மீள்ச்சி கிடைக்குமென்றால் அப்படி ஒன்று தேவையில்லை” என தெரிவித்துள்ளது. போன் பே-வின் இந்தப் பதிலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!