‘5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்’ - பேட்டிங்கில் மிரட்டிய தோனி : வீடியோ..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பயிற்சியில் தோனி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.


Advertisement

ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகின்றன. மும்பையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டுமே நீண்ட வருட ஐபிஎல் பகை கொண்ட அணிகள் என்பதால், முதல் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு அணிகளின் ஆட்டத்தை விட, அவற்றின் ரசிகர்கள் போடும் ஆட்டமே இன்னும் ஆரவாரமாக இருக்கும். இதனால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே இரண்டு அணியின் வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர்.

image


Advertisement

ஒருபுறம் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா இருக்கிறார். இவர் இந்திய அணியின் தற்போதைய தொடக்க வீரர். பேட்டிங்கில் மரண ஃபார்மில் இருக்கிறார். மறுபுறம் சென்னை அணியின் கேப்டன் தோனி. இவர் உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் இன்னும் ஒரு கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடவில்லை. ராணுவம், விவசாயம் என பிசியாக இருந்துவிட்டார்.

image

இந்நிலையில், தற்போது தான் தோனி பேட்டை தொட்டு பயிற்சி எடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் தோனி பேட்டை தொட்டதற்கே அவரது ரசிகர்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். வடிவேலுவின் காமெடி சீனில் வரும் வசனம் போல, ‘என் தலைவன் வந்துட்டாண்டா.. அவன் தலையப் பார்.. உடையப் பார்.. நடையைப் பார்..’ என சமூக வலைத்தலங்களில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் தோனியை, எத்தனை அடுக்கு பாதுகாப்பு போட்டாலும், அதையும் மீறி ரசிகர்கள் பாய்ந்து சென்று, கை கொடுத்துவிட்டும், கட்டி அணைத்துவிட்டும் வருகின்றனர். அவ்வாறு வரும் ரசிகர்களை தோனியும் கண்டிக்காமல் அரவணைத்துக்கொள்கிறார். அதனால் இன்னும் அவர் ரசிகர்களின் மனிதில் உயர்ந்துகொண்டே இருக்கிறார்.


Advertisement

தோனி பேட்டை தொட்டதற்கு இப்படி ரசிகர்களின் கொண்டாட்டும் குவிந்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தோனி 5 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் அடித்து விட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பயிற்சியின் போது அவர் 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசும் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஸ்டார் போர்ட்ஸ் தமிழ்’ சேனலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக தோனி பயிற்சிக்கு வந்த வீடியோக்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், தற்போது இந்த வீடியோ அவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement