ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், மார்ச் தொடக்கத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புனே - கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகும் சமந்தா? இந்த நல்ல செய்திதான் காரணமா?
இதனிடையே கொரோனா வைரஸ் அச்சத்தால், ‘அண்ணாத்த’ படத்தின் வடமாநில படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொல்கத்தா மற்றும் புனேவில் படப்பிடிப்பு நடத்த குழு திட்டமிட்டிருந்த நிலையில், உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வட மாநிலங்களில் படப்பிடிப்பு செய்வதற்கான திட்டங்களை படக்குழு கைவிட்டுள்ளதாக தெரிய வந்தது. ஆகவே இதன் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியிலேயே தொடங்க உள்ளது.
இந்நிலையில், டோலிவுட் நடிகர் கோபிசந்த் இந்தப் படத்தில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கெனவே ஜெயம் ரவி திரையில் நடிகராக அறிமுகமான ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்போது தமன்னா, ‘சீதிமார்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி