JUST IN

Advertisement

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி கட்சி தலைமையில் கூட்டணி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தமது தலைமையிலேயே கூட்டணி அமையும் என நடிகர் ரஜினி, மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

சென்னையில் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன.

கொரோனா எதிரொலி : உற்சாகம் இழந்த ஹோலி பண்டிகை


Advertisement

image

கட்சி அறிவிக்கும் தேதி, முதல் மாநாடு எங்கு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக நிர்வாகிகள் தகவல் கூறுகின்றனர். பாரதிய ஜனதா ஆதரவாளர் என்று கூறினால் அதற்கு தாம் பதில் அளிப்பதாக கூறிய ரஜினி, சிஏஏ-வை ஆதரித்ததற்கு மக்கள் கூறுவது என்ன என கேட்டதாகவும்‌‌, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்‌கள் சேர்க்கப்பட்டுள்ளனரா எனவும் ரஜினி வினவியதாக கூறப்படுகிறது.

image


Advertisement

தமது கட்சியே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்பதால், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களை ரஜினி கேட்டுக்கொண்டதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முறையான வழிக்காட்டுதல் இல்லாததால் மன்றப் பணிகளில் கடந்த ஆண்டு தொய்வு ஏற்பட்டதாக ஒரு சில மாவட்ட செயலாளர்கள் ரஜினியிடம் கூறியதாக தெரிகிறது. இதுவே ரஜினிகாந்துக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை? - மதுரையில் மூவர் கைது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement