சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஒரு திட்டத்தை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
இன்றைக்கும் சாதி மீறிய, மதத்தைத் தாண்டிய நடக்கும் திருமணங்களுக்குப் பல தடைகள் உள்ளன. அப்படி சாதி மற்றும் மதத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்பவர்கள் புறக்கணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையே நீடிக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு இடத்தை உறுதி செய்வதற்காக ‘பாதுகாப்பான வீடுகளைத்’ திறக்க கேரள அரசு தயாராகி வருகிறது. இதுபோன்ற பாதுகாப்பான வீடுகளை அனைத்து மாவட்டங்களிலும் திறப்பதற்கான முயற்சியை அம்மாநிலத்தின் சமூக நீதித்துறை எடுத்துள்ளது.
இது குறித்து சமூக நீதித்துறைக்கான அமைச்சர் கே.கே. ஷைலாஜா, “பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. சாதி மறுப்பு திருமணம் செய்த அல்லது மதத்தைத் தாண்டி திருமணம் செய்த தம்பதிகளுக்கு அச்சுறுத்தல்கள் இருந்தால் அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் வரை இந்த வீட்டில் தங்கலாம்” என்று கூறியுள்ளார்.
நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 இல் தூக்கு !
சாதி மறுப்பு மற்றும் மத தாண்டி திருமணம் செய்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் அம்மாநில சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தத் திட்டம் தன்னார்வ அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
“வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தார்” - பிளிப்கார்ட் நிறுவனர் மீது மனைவி புகார்
இத்தகைய தம்பதி பொதுப் பிரிவில் இருந்தால், அதுவும் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், சுயதொழில் செய்வதற்காக ஏற்கெனவே ரூ 30,000 நிதியுதவி அளித்து வருவதாகக் கூறியுள்ள அவர், அதே நேரத்தில், இவர்களில் ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு ரூ .75,000 உதவி வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
சாதி மறுத்து நடைபெறும் திருமணங்களுக்கு நாட்டில் பல்வேறு அச்சுறுத்தல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. கெளரவக் கொலை போன்ற புதிய கலாச்சாரம் தலைதூக்கி வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் கேரள அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில், 23 வயது பட்டியலின கிறிஸ்தவ நபர் ஒருவர், அவரது உயர் சாதி மனைவியின் உறவினர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!