[X] Close

37 பந்துகளில் அதிரடி சதம் : யாரென்று நிரூபித்த ஹர்திக் பாண்ட்யா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.


Advertisement

ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், காயத்திலிருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ளார். எவ்வித குறுக்கு வழியும் இன்றி, அயராத பயிற்சியால் மூன்று மாதங்களில் 7 கிலோ அளவிற்கு உடல் எடையை அதிகரித்ததாக ஹர்திக் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகியதால் இந்திய அணியில் ஏற்பட்ட வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் களமிறக்கப்பட்ட ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஒயிட் வாஷ் ஆனது இந்தியா.

‘ஒரே நாடு, ஒரே மக்கள் ஒரே மொழி’: சென்சாரில் கட் ஆன ஜிப்ஸியின் 2வது வீடியோ..!

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா ‘டீஒய் படில்’ எனும் டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக களம் கண்டார். முதல் போட்டியில், 4 இமாலய சிக்ஸர்கள் உள்பட 38 ரன்கள் விளாசியதோடு, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் 37 பந்துகளில் அதிரடி சதமடித்தார். இதில், 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடக்கம்.

image


Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த‌ செப்டம்பர் மாதத்திற்குப் பின் விளையாடாத ஹர்திக், காயத்திலிருந்து மீண்டு, ஃபார்மில் இருப்பதை நிரூபித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அ‌தற்கான இந்திய அணியில் ஹர்திக் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement