3,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள் : எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த 3 மாதங்களாக சீனாவை மட்டுமே தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 119 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 38 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 3,115 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 92,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சீனாவில் 2,981 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,270 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா உள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5,328 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement

image

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. சுமார் 100 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. 2,300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள எம்பிக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், அதில் 8% பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பணியாற்றவுள்ளார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜரின் மனைவி !

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ள நிலையில், 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல, ஜப்பானில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


Advertisement

image

இந்தியாவை பொறுத்தவரை யாரும் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement