கொரோனா விவகாரத்தில் கவனக்குறைவா? இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி?

Corona-virus-in-India-latest-news

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பல நாடுகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்றும், பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளன.


Advertisement

image

இந்தியாவில் சற்று தனிந்திருந்த கொரோனா குறித்த செய்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 16 இத்தாலியப் சுற்றுலாப் பயணிகள் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு அரசு சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்து இருந்தார்.


Advertisement

முதன்முதலாக சீனாவில் தொடங்கிய கொரோனாவின் பயணம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளது. சீனாவில் கொரோனா குறித்து அறிவிப்பு வெளியான உடனேயே உலக நாடுகள் அலெர்ட் ஆகின. இந்தியாவும் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. முதலில் சீனாவில் உள்ள இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வந்தது இந்திய அரசு. அழைத்து வந்தவர்கள் தனியாக தங்கவைத்து கண்காணிக்கப்பட்டனர்.

image

அது மட்டுமின்றி, சீனா மட்டுமின்றி ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இப்படி ஆட்கொல்லி கொரோனாவை நாட்டுக்குள் விடக்கூடாது என இந்திய அரசு பல முயற்சிகள் எடுத்தது. ஆனால் தொடக்கத்தில் இருந்த பரிசோதனைகளும், கவனமும் தினம் தினம் கடைபிடிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. சில கப்பல்களில் வந்தவர்களில் எந்த சோதனையும் செய்யப்படாமல் சொந்த ஊருக்கு திரும்பியதாக புகார்கள் எழுந்தன.


Advertisement

image

சுற்றுலாப்பயணிகள் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கிடையே கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா என்று செய்தி வெளியானது. பின்னர், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இனி இந்தியாவில் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இன்று இந்தியாவில் உள்ள 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதை அடுத்து கொரோனா பயம் மீண்டும் இந்தியாவில் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் அதிகம் பேர் இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் அமைச்சர்.

image

கொரோனா பாதுகாப்பில் எந்த அளவுக்கு இந்தியா தற்காப்புடன் இருக்கிறது?. இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியா தயாராக இருக்கிறதா? என பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்துள்ளன. உயிர்க்கொல்லி நோய் என்று தெரிந்தும் கொரோனா முன்னச்சரிக்கையில் இந்தியா கோட்டைவிட்டுவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை முறையாக கண்காணிக்கவோ பரிசோதிக்கவோ இல்லை என்பதே இந்தியாவில் கொரோனா வேகமாக பரவ காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

image

ஆட்கொல்லி வைரஸால் சீனாவே கலக்கத்தில் உள்ள நிலையில் அதன் வீரியத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. விமான நிலையம், தரைவழி, கப்பல் என அனைத்து வழித்தடத்தையும் தீவிரமாகவே அரசு கண்காணிக்க வேண்டும். முறையான கண்காணிப்பே நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் கொரோனாவுக்கு எதிராக போராட அனைத்து விதத்திலும் இந்தியா தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்..! 9 பேர் உயிரிழப்பு...!!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement