JUST IN

Advertisement

‘விஜயின் நடனமும், பிட்னெஸ் ரகசியமும்’ - அசந்துபோன ரித்திக் ரோஷன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜயின் பிட்னெஸ் ரகசியத்தை தெரிந்துகொள்ள விரும்புவதாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்


Advertisement

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் அதிகமுண்டு. அவர் நடித்த 'வார்', திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தூம்2, கிரிஷ் போன்ற இவரது படங்கள் மிகவும் பிரபலமானவை.

இந்நிலையில், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹிரித்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார்.


Advertisement

image

முன்னதாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் நடிகர் விஜய் குறித்து ஒரு வரியில் சொல்லுமாறு கேட்கப்பட்டது. அதற்கு, நடிகர் விஜயின் நடனத்தைக் கண்டும், அவரது எனெர்ஜியைக் கண்டும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன், விஜயின் பிட்னெஸ் ரகசியத்தையும், அவரது டயட் விவரத்தையும் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் ரித்திக் ரோஷன் தெரிவித்தார்.

image


Advertisement

பாலிவுட் திரையுலகில் நடனத்தில் கலக்கும் ரித்திக் ரோஷனே, விஜயின் நடனத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டுள்ளது தமிழ் திரையுலகிற்கு பெருமைதான் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை, சமூக வலைத்தளங்களில் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 பெரியார் குறித்த பேச்சு.. ரஜினி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement