[X] Close >

ஜெய்ப்பூர் வந்த இத்தாலி சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!

15-Italians-in-Jaipur-tour-group-test-positive-for-coronavirus--AIIMS

இத்தாலி நாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Advertisement

கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் சமீக காலமாக கொரோனா தாக்கம் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தந்திருந்த இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

       image


''ஜாக்கிசானுக்கு கொரோனாவா?'' - விளக்கம் அளித்த ஜாக்கிசான்! 


இத்தாலி நாட்டில் இருந்து வந்திருந்த 21 சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக மூன்று இந்தியர்கள் ஒரு குழுவாக ஜெய்ப்பூரில் தங்கியிருந்தனர். அவர்களில் இத்தாலியைச் சேர்ந்த 69 வயதுடையவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது மனைவிக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இத்தாலியில் இருந்து வந்திருந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த தம்பதி ஜெய்ப்பூரில் உள்ள சுவாமி மான் சிங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள 13 பேர் டெல்லியில் உள்ள ஐடிபிடி தனிசிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

         image


கோடை தொடக்கம்: சென்னையில் அதிகரிக்கும் 'மெட்ராஸ் ஐ ' பாதிப்பு 


முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இத்தாலியில் இருந்து இந்தியா வந்தவர். மற்றொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close