டெல்லி வன்முறை: 10-க்கும் மேற்பட்டோர் குண்டுகள் பாய்ந்து உயிரிழப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதில் 10-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

டெல்லி வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையின்போது உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பி, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வன்முறையாளர்கள் வசம் இருந்ததை பல்வேறு பகுதிகளில் காண முடிந்தது. இந்நிலையில் டெல்லி வன்முறையில் ‌உயிரிழந்தவர்களில் 10-க்கும் மேற்பட்டோர்‌ துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரி‌‌ழந்திருப்ப‌தாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி துப்பாக்கிக் குண்டு காயத்துடன் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ : சிஎஸ்கே வெளியிட்ட குடும்ப வீடியோ..!


Advertisement

image

 

சம்பவத்தின்போது காவல்துறையி‌னரை துப்பாக்கி முனையில் இளைஞர் மிரட்டும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நடந்த விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பதுங்கியிருந்த ஷாரூக்தான் இந்த செயலை செய்தது என தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர்.


Advertisement

வன்முறைக்கு முன்பாகவே டெல்லியில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கி இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினர் மீ‌து அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், டெல்லி ஜாமியா மிலியா மாணவர்கள் மீது வெளிநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் இருமுறை‌ துப்பாக்கிச் சூடு நடத்தியதும் வெளிநபர்கள் எனபது தெரியவந்துள்ளது.

சிஏஏவுக்கு எதிராக உச்ச‌நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மனு

image

 

பிரதமர், குடியரசுத் தலைவர் என முக்கிய தலைவர்கள் வலம் வரும் இடமாகவும், வெளிநாட்டு தலைவர்கள் வந்து செல்லும் இடமாகவும் உள்ள தலைநகர் டெல்லியில் சர்வ ‌சாதரணமாக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது பாதுகாப்புக்கு ‌அச்சுறுத்தலையே ஏற்படுத்தியுள்ளது. அதிலும்‌ அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-பின் இந்திய வருகையின்போது வன்முறையும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்றிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவைத்தவி‌ர கொலை, கொள்ளை கும்பல்களுக்கு துப்பாக்கிகளே பிரதான ஆயுதமாக உள்ளன. கடந்த ஆண்டு மட்டுமே இருமுறை கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடு சாலையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததும், 2017-ஆம் ஆண்டு கொள்ளை கும்பலுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்ததும் டெல்லி துப்பாக்கி கலாசாரத்தின் வரலாறாக தொடர்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement