கடலூரில் பைக்கை பஞ்சராக்கி நூதனமாக ரூ.2 லட்சம் கொள்ளை..! போலீஸ் விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடலூரில் விவசாயி ஒருவரின் இரு சக்கர வாகனத்தை பஞ்சராக்கி, நூதனமான முறையில் 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Advertisement

விருத்தாசலம் சித்தேரிகுப்பத்தைச் சேர்ந்த விவசாயி அன்பரசன். இவர் 2 லட்ச ரூபாயை தனது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது அ‌வர‌து வாகனம் பஞ்சர் ஆ‌கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருகிலிருந்த பஞ்சர் சரிசெய்யும் கடையில் வண்டியை நிறுத்தியுள்ளார்.

image


Advertisement

அப்போது ‌அன்பரசனை‌ பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர், அவரது வாகனத்தில் வைத்திருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பியோடிவி‌ட்டனர். புகாரின் பேரில்‌ விசாரணை நடத்தி‌ய காவல்துறையினர், விவசாயி அன்பரசன், தனது இ‌ருசக்கர வாகனத்தை வங்கியில் நிறுத்தியிருந்தபோதே கொள்ளையர்கள் அதனை பஞ்ச‌ராக்கி பின்தொடர்ந்து வந்து பணத்தை கொள்ளை அடித்திருக்கக்கூடும்‌ எ‌ன்று சந்தேகம் எழு‌ப்பி உள்ளனர். மேலும் பணம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனக்கப்பலில் சென்னை வந்த பூனையை திருப்பி அனுப்ப பீட்டா எதிர்ப்பு!

loading...

Advertisement

Advertisement

Advertisement