கெஜ்ரிவாலிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட பாஜக உறுப்பினர்

BJP-youth-wing-leader-seeks-Re-1-as-damages-from-Delhi-CM-Arvind-Kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கோரி பாஜக இளைஞர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 


Advertisement

இதுதொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த அங்கித் பரத்வாஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் ஆகியோருக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகள் பற்றி, தமக்குத் தெரியாது என்பதால் அவர்களிடமிருந்து ஒரு ரூபாயை நஷ்ட ஈடாகப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். பரத்வாஜ் என்ற துணைப்பெயரை மட்டும் வைத்துக் கொண்டு தமது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் அந்த மனுவில் அங்கித் பரத்வாஜ் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ராவை தாக்கியதாக தமது பெயரை ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் மீது அங்கித் ஷர்மா கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மே 10ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது, பரத்வாஜ் என்பவர் கபில் மிஸ்ராவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பரத்வாஜ் என்ற ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரே கபில் மிஸ்ராவைத் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement