தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாகவும், முதலமைச்சரை மாற்றத் தேவையில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் எம். நடராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மாற்றும் அவசியம் தற்போது இல்லை. அவரது தலைமையில் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பாஜக அதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறது. தமிழகத்தை காவிமயமாக்கும் மத்திய அரசின் எண்ணம் நிறைவேறாது. சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா பாதுகாப்பாக இருந்ததற்கு காரணம் நாங்கள்தான். அதனால், நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம். மாட்டேன் என்று நாங்கள் சொல்லவில்லை என்று அவர் தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?