கொரோனா எதிரொலியால் சில நாடுகளுக்கான விசா தடை..! - மத்திய அரசு அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Advertisement

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது. வுஹான் நகரிலிருந்து தாயகம் திரும்பிய கேரளா மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மூன்று ‌பேரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்தவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

image


Advertisement

இந்நிலையில், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்காக பெற்ற அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அச்சம்: கர்நாடகாவில் 284 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு..!

இந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கட்டாயம் வர வேண்டும் என விரும்புகின்றவர்கள், அருகேயுள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தூதர்கள் மற்றும் விமானச் சேவை பணியாளர்கள் ஆகியோருக்கு இந்தப் புதிய கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

அதே சமயத்திலே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மக்காவ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருவோருக்கு கட்டாய மருத்துவச் சோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு தற்காலிகமாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement