விஷாலை வைத்து படம் எடுப்பதாக 47 லட்சம் மோசடி - இயக்குநர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாகக் கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, இயக்குநர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

image

நடிகர் கரண் நாயகனாக நடித்த ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ உள்ளிட்ட‌ திரைப்படங்களை இயக்கியவர் வடிவுடையான். இவர் மீது‌ சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் கோத்தாரி என்ற தயாரிப்பாளர், கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 2016 ஆம் ஆண்டு தன்னைச் சந்தித்த வடிவுடையான், நடிகர் விஷாலை நன்றாகத் தெரியும் என்றும், தனது கதையில் நடிக்க விஷால் சம்மதித்திருப்பதாகவும் கூறியதாக தெரிவித்திருந்தார்.


Advertisement

மாஸ்டர் படத்துடன் மோதுவதா? : மே 1ல் வெளியிட ‘சூரரைப் போற்று’ படக்குழு திட்டம்

7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் விஷாலை வைத்து படம் எடுப்பதாகப் பேசி, 3 தவணையாக 47 லட்சம் ரூபாயை வடிவுடையான் பெற்றுக் கொண்டதாக மகேஷ் கோத்தாரி குறிப்பிட்டிருந்தார். ஆனால், சொன்னபடி வடியுடையான் படமும் எடுக்கவில்லை, பணத்தை திருப்பித் தரவும் இல்லை என்று புகார் அளித்திருந்தார்.

image


Advertisement

விசாரணையில், வடிவுடையான் பணம் வாங்கி ஏமாற்றியது உறுதியானதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement