[X] Close >

கொரோனா பாதிப்பு அச்சம்: கர்நாடகாவில் 284 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு..!

284-under-home-isolation-in-Karnataka

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் 284 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அம்மாநில சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் தெலுங்கனா மற்றும் டெல்லியில் உள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தனி கவனம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Advertisement

கொரோனா குறித்த விழிப்புணர்வு... டிக்டாக் உடன் கைகோர்த்த உலக சுகாதார நிறுவனம்..!

இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் குறித்து பீதி அடையத் தேவையில்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கடைபிடிக்கலாம்” என்றவர் அத்துடன் கைகளை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும், கண்கள், மூக்கு மற்றும் வாயினை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்களையும் அவர் இணைத்திருந்தார்.

image


Advertisement

இந்நிலையில், கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் துறை மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகத்தில் பேரில் 284 பேரை கர்நாடகாவில் வீட்டில் தனிமையில் வைத்து கவனித்து வருவதாக, அத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தொற்று நோய்கள் பிரிவு கூட்டு இயக்குநர் பிரகாஷ் குமார், “கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்யப்பட்ட சோதனையில் இதுவரை நோய் பாதிப்பு யாருக்கும் உறூதி செய்யப்படவில்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 284 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

image

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள கர்நாடக பகுதிகளான தக்ஷ்ண கன்னடா, குடகு, உடுப்பி, மைசூரு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கேரளாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்” என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close