இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: நடிகர் கமலிடம் விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமலிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

image


Advertisement

“கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்.. அந்த ரோஜா வேறு; இந்த ரோஜா வேறு” - வைரமுத்து 

இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் கமலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரின் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image


Advertisement

“என்னுடைய கடைசி நிமிடங்கள்...’- தூக்கில் தொங்கிய நிலையில் காவலர் சடலமாக மீட்பு 

முன்னதாக இந்த விபத்து தொடர்பாக இந்தியன் 2 இயக்குநர் ஷங்கரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாணை நடத்தியிருந்தனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement