செஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டாம் நிலை காவலர் சரவணன் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நடுநெல்லிமலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் செஞ்சி காவல்நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேல் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து நேற்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் அதன் பின்னர் இரவு எட்டு மணி அளவில் அளவில் வீடு திரும்பியுள்ளார்.
டெல்லி வன்முறை: 1300 பேர் கைது..
இந்நிலையில் செஞ்சி காவலர்கள் மட்டும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் குழுவில் தான் இருக்கும் இடத்தை ஷேர் செய்த சரவணன் “ என்னுடைய கடைசி நிமிடங்கள்...என்னை மன்னிச்சுடுங்க சார்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இதனைக் கண்டு பதட்டம் அடைந்த காவலர்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் பதிலேதும் அளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
“பாஜக பெண் எம்பிக்களிடம் காங்., எம்பிக்கள் அநாகரிகமாக நடந்தனர்”- ஸ்மிருதி இரானி
இதனையடுத்து சரவணன் அனுப்பிய குறுஞ்செய்தியை வைத்து அவர் இருந்த பகுதியை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் சரவணன் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சரவணன் சடலத்தை மீட்ட அனந்தபுரம் போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து சரவணன் இறந்ததற்கான காரணம் பணிச்சுமையா இல்லை குடும்ப பிரச்னையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?