மகனின் கொடுமை தாங்காமல், கருணை கொலை செய்ய வேண்டி வயதான பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன்(85). இவரது மனைவி கருணையம்மாள்(65). இவர்களுக்கு பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது.
ரயில்கள், ரயில் நிலையங்களில் 165 பாலியல் வன்கொடுமைகள்.. அதிர்ச்சி தகவல்..!
இந்நிலையில் வயதான தம்பதி இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்களது மகன் பழனிசாமி தங்களின் சொத்தை ஏமாற்றி பிடிங்கி கொண்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்..! புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை
இது குறித்து அவர்கள் கூறுகையில், “மகன் பழனிச்சாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி பிடுங்கி கொண்டு கடந்த10 ஆண்டுகாலமாக எங்கள் இருவரையும் கொடுமை படுத்தி வருகிறார். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எங்களுக்கு விடிவு கிடைக்கவில்லை. எங்கள் வீட்டில் மின்சாரத்தை துண்டித்து வைத்துள்ளார். குடிநீர் பிடிக்க விடுவதில்லை. நாங்கள் வாழவே வழி இல்லாமல் தத்தளித்து வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லாவிடில் கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி