‘காலாவதியான விசா.. போலியான ஆதார்’: மதுரையில் தங்கியிருந்த உஸ்பெகிஸ்தான் பெண்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் போலியான ஆதாருடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

போலியான ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் போலியான ஆதார் அட்டை பெற்று ஆன்லைன் உதவியுடன் மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தனியார் விடுதியில் வேறு நாட்டுப் பெண் ஒருவர் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். இதுகுறித்து மதுரை மாநகர தனிப்படை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த போலீசார் அந்த தனியார் விடுதிக்குச் சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர்.

image


Advertisement

ரயில்கள், ரயில் நிலையங்களில் 165 பாலியல் வன்கொடுமைகள்.. அதிர்ச்சி தகவல்..!

விசாரணையில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நைமோவா ஜெரினா(22) என்ற பெண் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்குச் சுற்றுலா விசாவில் வந்துள்ளார். கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் அவரது விசா காலம் முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் அவரது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லாமல் டெல்லியிலேயே தங்கி உள்ளார் என்பது தெரியவந்தது.

image


Advertisement

உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்..! புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

இதுதொடர்பாக திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக அந்தப் பெண் இங்குத் தங்கி இருப்பதற்கான காரணம் என்ன? வெளி நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் எதுவும் உளவு பார்க்க வந்தாரா? அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement