சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.

image


Advertisement

தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சிலிண்டர் ஒன்றின் விலை 714 ரூபாயாகவும், ஜனவரி மாதத்தில் 734 ரூபாயாகவும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த மாதம் விலை 147 ரூபாய் விலை அதிகரித்து 881 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாதம் 55 ரூபாய் விலை குறைந்து 826 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

image

இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 147 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

நெல்லையில் ரவுடிக் கும்பலைப்போல மோதிக் கொண்ட பள்ளி மாணவர்கள்!

loading...

Advertisement

Advertisement

Advertisement