கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

Bill-to-bring-cooperative-banks-under-RBI-regulation-to-get-Parliament-nod-during-Budget-session

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான மசோதா நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் நிறைவேற்றப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 11ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை தொடங்கவுள்ள 2ஆவது அமர்வில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க உள்ளார். மொத்தம் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

“யாரையும் குறை சொல்லும் பழக்கம் எங்களுக்குள் இல்லை” - பும்ரா பேட்டி


Advertisement

Image result for நாடாளுமன்றம்

இதன் ஒரு பகுதியாக கூட்டுறவு வங்கித் துறையில் நிதி நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பல மாநில கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பஞ்சாப் அண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடுகள் போன்ற தவறுகள் இனியும் நிகழாத வண்ணம் தடுக்க இந்த மசோதா உதவும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Image result for நிர்மலா சீதாராமன்


Advertisement

இதனிடையே, டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக டெல்லி வன்முறைகளுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யச் சொல்லி அவையில் வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது

ஜெராக்ஸ் கடையில் போனை திருடும் மர்ம நபர் - போலீஸ் வலைவீச்சு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement