அன்று குஜராத்.. இன்று டெல்லி.. - கலவரங்கள் கற்றுத் தரும் பாடம் என்ன ?

What-lesson-do-the-riots-in-India-teach-us

இந்தியாவில் கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல. மதங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் தோன்றிய அரசியல். சுருக்கமாகச் சொன்னால் இந்தியச் சுதந்திரம் என்பதே கலவரத்திற்கு இடையில் பிறந்த குழந்தைதான். 1946ல் நவகாளியில் கண்ட கலவரத்தை மனிதாபிமான அடிப்படையில் தடுக்க அன்று காந்தி இருந்தார். இன்று காந்தியின் பெரும் தியாகத்தையே கேலிப் பொருளாக்கும் அரசியல்வாதிகளை அதிகம் இந்தியா கொண்டுள்ளது. ஆகவே அவரது கொள்கை என்பது பாடத் திட்டத்தில் மருந்துக்கு இருக்கும் மறைபொருளாக மாறிவிட்டது.


Advertisement

image

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்றார். ஆனால் அவர் கண்ட கனவுக்கு எதிராக இந்தியா 1946க்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. டெல்லி கலவரங்கள் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன ? நாம் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கிறோம். சாலை போக்குவரத்து என்பது கடந்த 70 ஆண்டுகளில் 100 மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பெண்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம் எனப் பல துறைகளில் முன்னேறி உள்ள இந்தியா, மத அரசியலை விட்டும், சாதி அரசியலை விட்டும் முன்னேறவில்லை. அதற்கு சமீபத்திய சான்று வடகிழக்கு டெல்லி கலவரம்.


Advertisement

image

ஏறக்குறைய தீக்கு இரையாகி வருகிறது அந்த நகரம். டெல்லி முதல்வர் செய்வதறியாது தவிக்கிறார். ஆளுநரை உதவிக்கு அழைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடுகிறார். டெல்லி ஏதோ இந்தியாவின் கடைக் கோடி கிராமம் அல்ல. இந்தியாவின் தலைநகரம். பல வரலாற்று காரணங்களுக்கு ஆதாரமாக உள்ள இந்தியாவின் அடையாளம். முழுக்க முழுக்க மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாபெரும் மாநிலம். அங்கேதான் இந்த அடுக்கடுக்கான வன்முறை அரங்கேறி இருக்கிறது. டெல்லி காவல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஸ்ரீவஸ்தவா, பல இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்திய‌ பின், கடந்த 60 மணி நேரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“அரசின் பாசாங்குத்தனம் அம்பலமாகிவிடும்” - ட்ரோல் ஆகும் கெஜ்ரிவாலின் பழைய ட்வீட்


Advertisement

பொதுவாக கலவரங்களால் மக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அங்கே ஏற்படும் நிலையற்ற தன்மையால் வியாபாரம் முடங்கிப் போகிறது. பொருளாதாரம் வீழ்ந்து விடுகிறது. அதை மீட்டு எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனாலும் நாம் மதக்கலவரங்களில் இருந்து பாடம் கற்றதாக தெரியவில்லை. சுதந்திரத்திற்கு முன் நவகாளி, அடுத்து அயோத்தி, அதற்கு அப்புறம் குஜராத், இன்று டெல்லி.

image

கலவரங்கள் கற்றுத் தரும் பாடம் என்ன ? பத்திரிகையாளர் ஷியாம் என்ன சொல்கிறார். “சமீபத்திய கலவரத்தில் பெரியது குஜராத் கலவரம்தான். ஆனால் அதற்குப் பிறகு பத்து ஆண்டுகளாக எந்தக் கலவரமும் நடக்கவில்லை. இப்போது நடக்கும் கலவரத்திற்கு சிஏஏதான் காரணம். சிஏஏவின் குறிப்பிடப்பட்ட வார்த்தை சரியானதல்ல. 6வது முறையாக இந்தச் சட்டத்தை திருத்துகிறார்கள். உகாண்டாவில் இருந்து இந்தியர்களை இடி அமின் அனுப்பிவிட்டார். அவர்களுக்கு நாம் இங்கே அடைக்கலம் கொடுத்தோம். பல தலைமுறைக்கு முன் உகாண்டா போனவர்கள் அவர்கள். இந்தியாவில் அவர்களுக்கு எந்தச் சொத்துகளுமே கிடையாது. ஆனால் நாம் அடைக்கலம் கொடுத்தோம்.

டெல்லி வன்முறைக்கு பின்பு நாளை கூடுகிறது நாடாளுமன்றம் !

ஆகவே சிஏஏவில் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் தவிர்க்காமல் இருந்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. உண்மையிலேயே தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டத்தால் எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனால் அவர்கள் மனதில் ஒரு பயம் உள்ளது. அதை போக்கவேண்டியது அரசின் கடமை. இந்த டெல்லி கலவரம் அரசின் முன்கூட்டியே திட்டமிடாத தன்மையைத்தான் காட்டுகிறது. டெல்லி கலவரம் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் ஒரு சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வரக்கூடாது. அதை விவாதிக்க அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ஏன் வேகமாக நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தில் ஒளிவுமறைவு இல்லாத விவாதம் தேவை. அதை தவிர்த்தால் இப்படித்தான் நடக்கும்” என்கிறார்.

image

மேலும் அவர், “கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் குறைந்து வருகிறது. இதற்கும் நாட்டில் நடக்கும் கலவரத்திற்கும் தொடர்பு உள்ளது. கோவையில் நாங்கள் எழுதிய போது யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கலவரம் நடந்த பிறகு அந்த வியாபார நகரம் மீண்டு வர ஒரு வருடம் மேல் ஆனது. இந்தியாவில் அமைதி இருந்தால்தான் வியாபாரம் செழிக்கும். சமணம் ஒரு வியாபாரம் மதம். ஆகவே தான் தமிழ்நாடு வரை அது பரவியது. 2000 ஆயிரம் வருஷத்திற்கு முன் சமணம் உணர்த்திய பாடம் என்னவென்றால் அமைதி இருந்தால்தான் வியாபாரம் செழிக்கும் என்பதுதான்” என்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement